தற்செயலாக துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த மூன்று வயது குழந்தை

#Death #Hospital #children #America #GunShoot
Prasu
2 years ago
தற்செயலாக துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த மூன்று வயது குழந்தை

தெற்கு கலிஃபோர்னியாவில் மூன்று வயது குழந்தையொன்று தன்னைத் தானே சுட்டுக்கொன்றதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. 

துப்பாக்கி தற்செயலாக வெடித்ததில் குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

கிரீன்வில்லின் பீச் தெருவில் உள்ள வீட்டில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

அத்துடன் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான குழந்தை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினர். குடும்பத்தின் தனியுரிமைக்கு மதிப்பளிக்கும் வகையில் போலீசார் பல விவரங்களை வெளியிடவில்லை. 

இது ஒரு சோகமான விபத்து என்றும், வர்ணிக்கப்பட்டுள்ளது. இதேவேளை எதிர்காலத்தில் இவ்வாறான அசம்பாவிதங்கள் இடம்பெறாத வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் கூறியுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4