14 மாதங்கள் நிரம்பிய குழந்தை உயிரிழப்பு! யாழில் பரிதாபம்

#SriLanka #Jaffna #Death #children #baby #Fever #Baby_Born
Mayoorikka
1 year ago
14 மாதங்கள் நிரம்பிய குழந்தை  உயிரிழப்பு! யாழில் பரிதாபம்

யாழ்ப்பாணத்தில் 14 மாதங்கள் நிரம்பிய குழந்தை ஒன்று திங்கட்கிழமை (5) உயிரிழந்தமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 இதன்போது சாவகச்சேரி - இத்தியடி பகுதியை சேர்ந்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

 இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குழந்தை இரண்டு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குழந்தை திங்கட்கிழமை (5) காலை 8 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.

 இருப்பினும் சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை (5) பி.ப 1 மணியளவில் குழந்தை உயிரிழந்தது.

 குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!