புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்களை தேவைக்கு மாத்திரம் பயன்படுத்தும் இலங்கையின் சிங்கள அரசாங்கம்!

இலங்கையில் உள்ள தொலைத் தொடர்பு நிறுவனமான டெலிகாம் நிறுவனத்தினை குறிவைத்து மூன்று மிகப் பெரும் நிறுவனங்கள் போட்டி போட்டிருந்தன.
இந்த போட்டியில் இலங்கையை சேர்ந்த தமிழ் வெளிநாட்டு தொலைபேசி நிறுவனமும் மற்றும் இந்தியாவிலே மிகப் பெரும் பணக்காரராக இருக்கும் அம்பானி நிறுவனமும் அத்தோடு சீனாவை சார்ந்த மிகப்பெரும் தொலைபேசி நிறுவனமும் போட்டியிட்டனர்.
இந்தப் போட்டியில் இலங்கை டெலிகாம் நிறுவனத்தினை அண்மையில் இந்தியாவின் அம்பானி நிறுவனத்திற்கு சொந்தமான ஜியோ நிறுவனம் வாங்குவதற்கு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனாவின் நிறுவனத்திற்கும் இலங்கை புலம்பெயர் முதலீட்டாளரின் நிறுவனத்திற்கு இது விற்கப்படாது என்ற தகவலும் கசிந்துள்ளது. எது இவாறாக இருப்பினும் இலங்கையை தூக்கி நிறுத்துவதற்கும் இலங்கையின் பொருளாதாரத்தினை சீர்திருத்தம் செய்வதற்கும் இலங்கை தமிழர்களை உள்வாங்குவதற்கும் இலங்கை அரசாங்கம் பெரிதாக நாட்டம் இல்லாததன் காரணத்தினால்தான் புலம்பெயர் இலங்கைத் தமிழருக்கு டெலிட் கொம் நிறுவனத்தினை கொடுக்காததில் இருந்து நாங்கள் புரியக் கூடியதாக உள்ளது.
இலங்கை அரசும் சரி இலங்கையை மாறி மாறி ஆளுகின்ற கட்சிகளும் சரி இவர்கள் எப்பொழுதும் இலங்கைத் தமிழர்களுக்கோ புலம்பெயர் தமிழர்களுக்கோ எந்தவித சலுகையையையும் கொடுக்கப் போவதில்லை என இதிலிருந்து புலப்படுகின்றது.



