நடிகர் விஜயின் அரசியல் ஆரம்பத்திற்கு வாழ்த்து தெரிவித்த நாமல் ராஜபக்ஷ
#SriLanka
#Actor
#TamilCinema
#Congratulations
#Namal Rajapaksha
#Vijay
#Politician
Prasu
2 years ago
தென்னிந்திய நடிகர் விஜயின் அரசியல் பிரவேசத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அரசியலுக்கு வந்த நடிகர் விஜய்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் புதிய அத்தியாயத்திற்கு நல்வாழ்த்துக்கள் என தனது எக்ஸ் தளத்தில் நாமல் ராஜபக்ச பதிவொன்றை மேற்கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியின் பெயரை இன்று அறிவித்திருந்தார். கட்சியின் தலைவராக விஜய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2026-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலைக் குறிவைத்து தனது கட்சி செயல்படும் என்றும் விஜய் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது