இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
#SriLanka
#weather
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள், முல்லைத்தீவு, மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் மற்ற பகுதிகளில் 2.00 மணிக்கு பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீற்றர் கனமழை பெய்யக்கூடும் என்றும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.
மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்காலிக பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை, மின்னலினால்ஏற்படும் அபாயங்களைக் குறைக்க
தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களைக் கோருகிறது.