ஏ 9 வீதியின் மாங்குளம் பகுதியூடாக பயணிப்போரிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

#SriLanka #people #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
ஏ 9  வீதியின் மாங்குளம் பகுதியூடாக பயணிப்போரிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

உலக சிறுவர் நலன் காப்பகத்தினால் இன்றைய தினம்(31) ஏ 9 வீதியின் மாங்குளம் முதல் முறுகண்டி பகுதி வரையான வீதியின் இரு புறங்களிலும் வீசப்பட்டிருக்கின்ற பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உள்ளிட்ட கழிவு பொருட்களை முறையாக அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

எதிர்கால சந்ததிக்கான சிறந்த சுற்றுச்சூழலை அமைக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த பணிகள் முதல் கட்டமாக இன்றைய தினம்  மாங்குளம் முதல் முறிகண்டி பகுதி வரையில் முன்னெடுக்கப்பட்டது. 

images/content-image/1706704577.jpg

பனிக்கன்குளம், கிழவன்குளம், மாங்குளம் ஆகிய கிராமங்களை சேர்ந்த சிறுவர்கள் மற்றும் பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவின் சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவின் மக்கள் உலக சிறுவர் நலன் காப்பக ஊழியர்களும் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர். 

குறிப்பாக நிரந்தர தீர்வாக மாங்குளம் முதல் முறுகண்டி வரையிலான பகுதிகளில் 15 குப்பை தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

 ஆகவே குறித்த வீதியை பயன்படுத்துகின்ற மக்களிடம் கிராம மக்கள் மற்றும் உலக சிறுவர் நலம் காப்பகத்தினர் பணிவாக வேண்டிக்கொள்வது நீங்கள் பாவனை செய்கின்ற பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உள்ளிட்ட கழிவுப்பொருட்களை வீதிகளில் ஆங்காங்கே வீசாது உரிய தொட்டிகளில் போட்டு ஆதரவு தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!