சாந்தனை நாட்டிற்கு அழைத்துவருவது தொடர்பாக டக்ளஸ் தேவானந்தா வழங்கிய உறுதிமொழி!

#SriLanka #Douglas Devananda #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
சாந்தனை நாட்டிற்கு அழைத்துவருவது தொடர்பாக டக்ளஸ் தேவானந்தா வழங்கிய உறுதிமொழி!

இந்தியாவின் மறைந்த முன்னாள் பிரதமர்ராஜீவ் காந்தி  கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையாகிய சாந்தன் நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி ஒரு சில தினங்களுக்குள் பதிலை பெற்றுத் தருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.  

குறித்த வழக்கின் தீர்ப்பில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சாந்தன் சுகயீனம் காரணமாக  வைத்தியசாலையில் அனுமதிக்ப்பட்டுள்ள நிலையில், அவரின் தாய் மற்றும் சகோதர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நேற்று(30.01)  சந்தித்து சாந்தன் நாட்டிற்கு வருவதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறு கேட்டுக் கொண்டனர்.  

இதன்போதே அமைச்சர் டக்ளஸ் தேவானநந்தாவினால் குறித்த உறுதி மொழி வழங்கப்பட்டது.  

கடந்த நவம்பர் 27 ஆம் திகதி புலிச் சின்னம் அணிந்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!