சுன்னாகம் - கந்தரோடு பகுதியில் நபர் ஒருவர் வெட்டி படுகொலை!
#SriLanka
#Police
#Investigation
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தரோடு பகுதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவருக்கு சொந்தமான கோழிகள் தாக்குதல் தாரியின் வீட்டிற்குள் புகுத்தமையால் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறிய நிலையில், கொலைக்கு வழிவகுத்ததாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொலையை செய்த 54 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சடலம் தெலிப்பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



