சந்தானத்தின் முதல் பெரிய படஜட் படம் பெப். 2 வெளிவருகிறது

#Cinema #TamilCinema #Lanka4 #திரைப்படம் #release #லங்கா4 #தமிழ் #lanka4Media #lanka4_news #லங்கா4 ஊடகம் #lanka4.com
Mugunthan Mugunthan
3 months ago
சந்தானத்தின் முதல் பெரிய படஜட் படம் பெப். 2 வெளிவருகிறது

சந்தானம், மேகா ஆகாஷ் நடித்துள்ள படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’. பீப்பிள் மீடியா ஃபேக்டரி சார்பில் விஸ்வ பிரசாத் தயாரித்துள்ள இந்தப் படத்தை கார்த்திக் யோகி இயக்கியுள்ளார். பிப். 2-ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

 விழாவில் சந்தானம் பேசும்போது, “ எனக்கு இதுதான் முதல் பெரிய பட்ஜெட் படம். ‘டிடிரிட்டர்ன்ஸ்’ பட ஸ்டைலில் ஒரு காமெடி படம் எடுத்து ஹிட் கொடுக்க ஆசைப்பட்டேன். அப்படி வந்த கதைதான் இது. இந்தப் படத்தில் யார் மனதையும் புண்படுத்தும் காட்சிகள் இருக்காது. 

images/content-image/1706517512.jpg

அனைவரும் சிரித்து ரசிக்கும்படியாக இருக்கும். நானும் ஆர்யாவும் பல படங்களில் இணைந்து நடித்திருக்கிறோம். இடையில் சேர்ந்து நடிக்கவில்லை. விரைவில் இருவரும் இணைந்து அட்வென்சர் ஃபேன்டஸி படம் பண்ண இருக்கிறோம். ஆர்யா தயாரிப்பிலும் நடிக்க இருக்கிறேன்” என்றார்.