மன்னர் சார்லஸ் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி

#Hospital #London #KingCharles #England #Surgery #lanka4Media #lanka4.com
Prasu
1 year ago
மன்னர் சார்லஸ் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி

இங்கிலாந்து மன்னர் 3-ம் சார்லசுக்கு (வயது 75) 'புராஸ்டேட்' அறுவை சிகிச்சைக்கு திட்டமிடப்பட்டு இருந்தது.

இதற்காக அவர் லண்டனில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நேற்று அனுமதிக்கப்பட்டார். 

அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. முன்னதாக இதே மருத்துவமனையில் சார்லசின் மருமகளும், இளவரசியுமான கேத்துக்கு கடந்த வாரம் அறுவை சிகிச்சை நடந்தது. 

மருத்துவமனையிலேயே தங்கியிருக்கும் கேத்தை நேற்று காலையில் சார்லஸ் மருத்துவமனையில் சென்று பார்த்தார். 

அதைத்தொடர்ந்து அவரது அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகள் ஆஸ்பத்திரியில் நடந்தன. அவர் எத்தனை நாட்கள் மருத்துவமனையில் இருப்பார் என்ற தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!