சனத் நிஷாந்தவின் சாரதியின் கையடக்க தொலைபேசி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில்!
#SriLanka
#Investigation
#Lanka4
#lanka4Media
#lanka4_news
#lanka4.com
PriyaRam
1 year ago

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதியின் கையடக்க தொலைபேசி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்தை அடுத்து சந்தேகநபரான சாரதியின் கையடக்க தொலைபேசி கந்தானை பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.
இந்தநிலையில், மேலதிக விசாரணைகளுக்காக குறித்த கையடக்க தொலைபேசி குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளததாக பெலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தில் காயமடைந்த சாரதி விளக்கமறியல் உத்தரவில் தற்போது ராகமை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



