மயிலிறகாய் தமிழர் மனதை வருடியவர் என இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் பவதாரணியின் இரங்கல் செய்தியில் தெரிவிப்பு

#Cinema #TamilCinema #Lanka4 #இலங்கை #இசை #லங்கா4 #Singer #AR_Rahman #lanka4Media #lanka4_news #லங்கா4 ஊடகம் #lanka4.com #condolence
Mugunthan Mugunthan
2 months ago
மயிலிறகாய் தமிழர் மனதை வருடியவர் என இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் பவதாரணியின் இரங்கல் செய்தியில் தெரிவிப்பு

“மயிலிறகாய் தமிழர் மனதை வருடியவர்” என பின்னணி பாடகர் பவதாரிணி மறைவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

 இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “மயிலிறகாய் தமிழர் மனதையெல்லாம் வருடிய பவதாரிணியின் மதுரமான குரல் இன்றும் ஆகாயத்தில் மலர்கிறது. காற்றெல்லாம் தீரா அதிர்வெழுப்பிக் ககனவெளியெங்கும் கதிரொளியாய் விரிகிறது. 

இசைஞானி இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா இந்த நேரத்தில் உங்களுடன் துணை நிற்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.