காற்றில் வரும் கீதமே: ஓய்ந்தது இளையராஜாவின் மகள் பவதாரணியின் குரல்!

#India #Death #Lanka4 #Music #Ilayyaraja
Mayoorikka
3 months ago
காற்றில் வரும் கீதமே: ஓய்ந்தது இளையராஜாவின் மகள் பவதாரணியின் குரல்!

இசை என்றால் எமக்கு முதலில் ஞாபகம் வருவது இளையராஜாதான். நாம் எந்த மாதிரியான உணர்வில் இருந்தாலும் அவருடைய இசையை கேட்க வேண்டும் போல் தோன்றும். அப்படி தனது இசையால் அனைவரையும் கட்டிப் போட்ட நபர் என்றால் அது இசைஞானி இளையராஜாதான். 

 உலகளாவிய ரீதியில் இசைத்துறையில் கொடிகட்டிப் பறந்த நபர் இளைஜராஜா. அவர் பல சர்ச்சைகளில் ஈடுபாட்டிருந்து பல எதிர்ப்புக்கள் இருந்தாலும் கூட அவரது எதிர்ப்பாளிகளிடமிருந்தும் அவரது இசையினால் அவருக்கு மரியாதை உள்ளது.

 இளையராஜாவின் மனைவியின் பெயர் ஜீவா. இளையராஜாவுக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இவர்களது குடும்பமே இசை குடும்பம். 

பவதாரணியும் பின்னணி பாடகிதான். ஒளியிலே பாடலை அவர் பாடிய விதம் அனைவரையும் ஈர்த்தது. பிரபுதேவா, ரோஜா நடித்த ‛ராசய்யா' திரைப்படத்தில் தனது தந்தை இளையராஜாவின் இசையில் ‛மஸ்தானா மஸ்தானா. 

images/content-image/2023/01/1706243794.jpg

என்ற பாடல் மூலம் பாடகியாக அறிமுகமானார். இந்த பாடலை பாடிய பவதாரிணிக்கு தேசிய விருது கிடைத்தது.

 வேறு எந்தவொரு பாடகி குரலின் சாயலும் இல்லாமல், தனித்துவம் மிக்க குரல் இனிமையில் பல வெற்றி பாடல்களை பாடியிருக்கிறார் பவதாரிணி.

 2002ல் நடிகை ரேவதி இயக்கிய மித்ர் - மை பிரண்ட் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தமிழில் அமிர்தம், இலக்கணம், வெள்ளச்சி, மாயநதி உள்ளிட்ட 10 படங்களுக்கு இசையும் அமைத்துள்ளார். பவதாரிணிக்கு சபரிராஜ் என்பவருடன் திருமணம் ஆனது. 

இவர்களுக்கு குழந்தை இல்லை... பவதாரிணியின் உடன் பிறந்த சகோதரர்களான கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் தந்தை இளையராஜா போன்று சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருகின்றனர். 

images/content-image/2023/01/1706243822.jpg

 பவதாரிணியின் குரலில் வெளிவந்த சில பாடல்கள்......

 01. மஸ்தானா மஸ்தானா... ராசய்யா...

 02. மயில் போல பொண்ணு ஒன்னு... பாரதி...

 03. ஒளியிலே தெரிவது தேவதையா... - அழகி... 

 04. இது சங்கீத திருநாளா... - காதலுக்கு மரியாதை... 

 05. தென்றல் வரும்... - ப்ரண்ட்ஸ்...

 06. வானம் அதிரவே... - ரமணா...

 07. ஒரு சின்ன மணிக்குயிலு... - கட்டப்பஞ்சாயத்து... 

 08. காற்றில் வரும் கீதமே... - ஒரு நாள் ஒரு கனவு... 

 09. தவிக்கிறேன்... தவிக்கிறேன்... - டைம்... 

 10. நான் கண்களாலே பார்த்தேன் உன்னை.... - புதிய கீதை... 

 11. தாலியே தேவயில்ல... - தாமிரபரணி... 

 12. நீ இல்லை என்றால் வானவில்லே... - தீனா... 

 13. ஆத்தாடி ஆத்தாடி... - அனேகன்... போன்ற பல பாட்டுக்களை பாடியுள்ளார். 

 இந்த சூழலில் அவருக்கு புற்றுநோய் வந்ததாக கூறப்படுகிறது. இதனையொட்டி கடந்த சில வருடங்களாகவே அவர் சிகிச்சையில் இருந்தார். 

 சிகிச்சைக்காக இலங்கைக்கு சென்ற அவர் சிகிச்சை பலனின்றி இலங்கையில் உயிரிழந்தார். 

அவரது உடல் விரைவில் இந்தியாவுக்கு எடுத்து செல்லப்படவுள்ளது. அவரது உயிரிழப்பு இளையராஜா குடும்பத்தையும், இசை ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

 அவரது இறப்பிற்கு லங்கா4 ஊடகம் அஞ்சலி செலுத்துவதோடு அவரது இறப்பினால் துன்புற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து நிற்கின்றது.