செங்கடல் தாக்குதல்கள் - மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும்!

#world_news #Lanka4 #WorldWar #lanka4Media #lanka4_news #lanka4.com
PriyaRam
2 years ago
செங்கடல் தாக்குதல்கள் - மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும்!

செங்கடலில் நடத்தப்படும் தாக்குதல்கள் கவலையளிக்கின்றன எனவும் இத்தாக்குதல் தொடர்வது, மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கக் கூடும் என ஐ.நா. பொதுச் சபை தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் எச்சரித்துள்ளார்.

ஐ.நா. பொதுச் சபையின் 78ஆவது அமர்வின் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ், இந்தியாவுக்கு 5 நாள் அரசு முறைப் பயணமாக கடந்த திங்கட்கிழமை சென்றிருந்தார்.

இதற்கிடையே செய்தி நிறுவனமொன்றுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது, செங்கடலில் தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்கள் கவலையளிக்கின்றன, இத்தாக்குதல் தொடர்ந்தால் மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கக் கூடும். 

images/content-image/1706166128.png

செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடங்கிய தாக்குதலுக்கு மூன்றாம் தரப்பினர் உதவுவதுபோலுள்ளது. 

எனவே சூழல் மிகவும் மோசமாக மாறி வருகிறது. அதேபோல் காஸா பிரச்சினைக்கு அமைதி வழியே தீர்வு. 

இஸ்ரேல்-பாலஸ்தீனம் என இரண்டும் தனிநாடுகளாக செயல்பட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4