அஜித் குமாரின் 63வது படத்திற்கு ஜோடி தபு. 24 ஆண்டின் பின் மீண்டும் இணைகிறார்கள்....
#Cinema
#Actor
#Actress
#TamilCinema
#Lanka4
#lanka4Media
#lanka4_news
#lanka4.com
Mugunthan Mugunthan
1 year ago
நடிகர் அஜித், மகிழ் திருமேனி இயக்கும் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். இதில் த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பு விரைவில் முடிய இருக்கிறது.
இதையடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் அஜித். இது அவருக்கு 63-வது படம். இதன் படப்பிடிப்பு ஏப்ரல் இறுதி அல்லது மே மாதம் தொடங்க இருக்கிறது. சமீபத்தில் இந்தப் படத்துக்காக ஆபீஸ் பூஜை போடப்பட்டது.

இந்நிலையில் இந்தப் படத்தில் அஜித் ஜோடியாக தபு நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த 2000-ம் ஆண்டில் ராஜீவ் மேனன் இயக்கிய ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். 24 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சேர்ந்து நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.