நீதி நடவடிக்கைக்கு ஆதரவு வழங்குவோருக்கு பண வெகுமதி வழங்க பொலிஸார் நடவடிக்கை!
#SriLanka
#Police
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகளை கைப்பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்க காவல்துறை முடிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட பொலிஸாரின் நீதி நடவடிக்கை வெற்றியளித்துள்ளதாகவும், தகவல் கொடுப்பவர்களுக்கு பண வெகுமதி வழங்க பொலிஸார் முடிவு செய்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பதில் பொலிஸ் மா அதிபர் தேஸ்பந்து தென்னகோன், அனைத்து சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள், பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பிரதேச அதிகாரிகள் மற்றும் பணிப்பாளர்களுக்கு இது தொடர்பில் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
அத்தகைய தகவல்களை வழங்கும் நபர்களின் ரகசியத்தன்மை பாதுகாக்கப்பட்டு, கீழ்க்கண்டவாறு பண வெகுமதிகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



