பௌத்த பிக்கு சுட்டுப் படுகொலை!
#SriLanka
#Death
#Lanka4
#GunShoot
#lanka4Media
#lanka4_news
#lanka4.com
PriyaRam
1 year ago

கம்பஹா, மல்வத்து ஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பௌத்த பிக்கு ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
44 வயதுடைய தேரர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கம்பஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி குறித்த தேரர் உயிரிழந்துள்ளார்.
T-56 ரக துப்பாக்கியினால் இந்த சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், 04 சந்தேக நபர்கள் தப்பி சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



