ஹரக் கட்டாவின் மற்றுமொரு சகா கைது!
#SriLanka
#Arrest
#Police
#Lanka4
#lanka4Media
#lanka4_news
#lanka4.com
PriyaRam
1 year ago

தற்போது குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பில் தடுப்பு காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும், திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குழுவின் தலைவரான ஹரக் கட்டாவுடன் தொடர்பை பேணிய மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய, வெல்லம்பிட்டி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைதானவர் வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் என குறிப்பிடப்படுகின்றது.



