பெலியத்த துப்பாக்கிச்சூடு : பாதாள உலகக் கும்பலுக்கும் தொடர்பு!

#SriLanka #Lanka4 #GunShoot #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
பெலியத்த துப்பாக்கிச்சூடு : பாதாள உலகக் கும்பலுக்கும் தொடர்பு!

பெலியத்தவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த அபே ஜன பல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உட்பட ஐவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலான ஆரம்ப விசாரணைகளில், அதற்கு பழிவாங்கும் நோக்கில் கொஸ்கொட சுஜீ தலைமையிலான பாதாள உலகக் கும்பல் இந்த துப்பாக்கிச் சூட்டைத் திட்டமிட்டிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.

பாதாள உலக நாடுகளின் பழிவாங்கும் நடவடிக்கையாக கருதப்படும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை தென் மாகாண விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருவதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

தெற்கு அதிவேக வீதியின் பெலியத்த - கஹவத்த நுழைவாயிலுக்கு அருகில், பிராடோ ரக வாகனத்தில் வந்த குழுவொன்று டிஃபென்டர் ஜீப்பில் பயணித்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது. சமன் பெரேரா உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் ஹசித ரணசிங்க, சமீர மதுஷங்க, புத்திக ராஜபக்ஷ மற்றும் தெமட்டகொட சம்பிரிய ஜயதிலக என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பந்தமாக விசாரணை செய்ய 06 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!