பெலியத்த துப்பாக்கிச்சூடு : 06 விசேட பொலிஸ் குழுக்கள் நியமனம்!

#SriLanka #Police #Lanka4 #GunShoot #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
பெலியத்த துப்பாக்கிச்சூடு : 06 விசேட பொலிஸ் குழுக்கள் நியமனம்!

பெலியத்த பிரதேசத்தில் ஐந்து பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு 06 விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. 

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தற்போது 06 குழுக்களை நியமித்துள்ளார். 

அடிப்படையில் தென் மாகாண குற்றப்பிரிவு, தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவு, தங்காலை தலைமையக பொலிஸ் பரிசோதகரின் கீழ் தனியான குழு, பெலியத்த பொலிஸ் குழு, இன்னுமொரு அதிகாரிகள் குழு, புலனாய்வு குழுக்கள் தலைமையில் விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!