இயக்குனர் பார்த்திபனின் புதிய படம் டீன்ஸ் குழந்தைகளை மையமாக வைத்து உருவாகும்

#Cinema #TamilCinema #Director #Film #Lanka4 #திரைப்படம் #இயக்குநர் #லங்கா4 #தமிழ் #Production #lanka4Media #lanka4_news #லங்கா4 ஊடகம் #lanka4.com
Mugunthan Mugunthan
3 months ago
இயக்குனர் பார்த்திபனின் புதிய படம் டீன்ஸ் குழந்தைகளை மையமாக வைத்து உருவாகும்

இயக்குநர் பார்த்திபன் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இப்படம் குழந்தைகளை மையமாக கொண்டு உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கடந்த 2022-ம் ஆண்டு பார்த்திபன் நடித்து இயக்கிய திரைப்படம் ‘இரவின் நிழல்’. சிங்கிள் ஷாட்டில், நான் லீனியராக உருவான இப்படத்தில் இடம்பெற்ற ‘மாயவா’ ஸ்ரேயா கோஷலுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. 

images/content-image/1705763933.jpg

இந்தப் படத்தைத் தொடர்ந்து பார்த்திபன் இயக்கும் புதிய படத்துக்கு ‘டீன்ஸ்’ (TEENZ) என பெயரிடப்பட்டுள்ளது. குழந்தைகளை மையமாகக் கொண்ட சாகச திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது. 

படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். காவ்மிக் ஆரி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் அறிவிப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பார்த்திபன் கூறுகையில், “எங்கள் திரைப்படத்தின் முதல் பார்வை அனுபவம் இதோ உங்களுக்காக. முதல் முறையாக சென்சார் சான்றிதழோடு இது வெளியாகியுள்ளது.