கிளிநொச்சியில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு!

#SriLanka #Death #Police #Kilinochchi #Body #Lanka4
Mayoorikka
1 year ago
கிளிநொச்சியில்  இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு!

கிளிநொச்சி பன்னங்கண்டி பகுதியில் இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்னங்கண்டி அ.த.க பாடசாலைக்கு முன்பாக உள்ள கழிவு வாய்க்கால் ஒன்றிலேயே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார்.

 குறித்த நபர் மது போதையில் இருந்த நிலையில் நேற்று மாலை 7 மணியளவில் மக்களால் அவதானிக்கப்பட்டுள்ளார்.

images/content-image/2023/01/1705724682.jpg

 இன்று காலை குறித்த நபர் சடலமாக காணப்படுவது அவதானிக்கப்பட்டு பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் மருதநகர் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஜெயராம் டினேஸ் எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

images/content-image/2023/01/1705724732.jpg

 சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பவ இடத்தில் நீதவான் விசாரணைகளின் பின்னர் குற்றதடுப்பு பொலிசார் விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

images/content-image/2023/01/1705724757.jpg

 அண்மை நாட்களாக இளைஞர்களின் உயிர் இழப்புக்கள் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!