அமெரிக்காவில் பனிப்புயலால் 43 பேர் உயிரிழப்பு

#Death #America #Climate #Strom #Rescue #Snow #lanka4Media #lanka4.com
Prasu
2 years ago
அமெரிக்காவில் பனிப்புயலால் 43 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் பனிப்புயல் பாரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. டஜன் கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதுடன், ஏராளமான மாநிலங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த பருவத்தின் மிக மோசமான குளிர் காலநிலையை நாடு எதிர்கொள்வதால், வரும் நாட்களில் மோசமான வானிலையே நிலவக்கூடும் என அந்நாட்டு வானிலை சேவை தெரிவித்துள்ளது.

ஒன்பது மாநிலங்களில் புயல்களால் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 43 ஆக அதிகரித்துள்ளதாக செய்தி சேவை தெரிவித்துள்ளது.

 பாதிக்கப்பட்டவர்களில் சிலர் தாழ்வெப்பநிலை, கார்பன் மோனாக்சைடு விஷம் பரவியமை மற்றும் கார் விபத்துக்கள் போன்ற வானிலை தொடர்பான காரணங்களால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4