மிதுன ராசியினருக்கு தடைபட்டு வந்த முயற்சி நிறைவேறும் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #lanka4Media #lanka4.com
Prasu
3 months ago
மிதுன ராசியினருக்கு தடைபட்டு வந்த முயற்சி நிறைவேறும் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். ஒவ்வொரு செயலிலும் யோசித்து செயல்படுவது நன்மையாகும். பரணி: திடீர் பயணம் உண்டாகும். உங்கள் கவனக்குறைவால் பணிகளில் தடுமாற்றம் ஏற்படும். கார்த்திகை 1: புதிய முயற்சிகளை ஒரு முறைக்கு பலமுறை யோசித்து மேற்கொள்வது நன்மையை உண்டாக்கும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி தருவார்கள். குடும்பத்திற்காக திடீர் செலவுகள் ஏற்படும். ரோகிணி: வரவு ஒரு பக்கம் வந்தாலும் செலவு மறுபக்கம் தயாராக இருக்கும். கவனம் தேவை. மிருகசீரிடம் 1,2: குடும்பத்தினர் எதிர்பார்ப்பு அதிகரிக்கும். கடன் வாங்கி செலவுகள் செய்வீர்கள்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: வியாபாரத்தில் கூடுதல் லாபம் காண்பீர்கள். சிலர் புதிய இடம் வாங்குவீர்கள். திருவாதிரை: புதிய முயற்சி ஒன்றில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். வர வேண்டிய பணம் வந்து சேரும். புனர்பூசம் 1,2,3: வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். தடைபட்டு வந்த முயற்சி நிறைவேறும்.

கடகம்

புனர்பூசம் 4: வியாபாரத்தில் இருந்த மந்தநிலை சரியாகும். உங்கள் அணுகுமுறையால் லாபம் அதிகரிக்கும். பூசம்: புதிய திட்டங்கள் தீட்டி செயல்படுவீர்கள். நண்பர்கள் உதவியுடன் உங்கள் முயற்சி பலிதமாகும். ஆயில்யம்: வியாபாரத்தில் உபரி வருமானம் ஏற்படும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும்.

சிம்மம்

மகம்: குடும்பத்தில் இருந்த சங்கடநிலை மாறும். உங்கள் அணுகுமுறை ஆதாயத்தை ஏற்படுத்தும். பூரம்: நீங்கள் நினைத்திருந்த ஒரு செயலை நிறைவேற்றுவீர்கள். பெரியோர் ஆதரவு நன்மை தரும். உத்திரம் 1: உங்கள் முயற்சி சிறுசிறு தடைகளுக்குப்பின் நிறைவேறும். எதிர்பார்த்த பணவரவு உண்டு.

கன்னி

உத்திரம் 2,3,4: தொழிலில் கவனத்துடன் செயல்படுவீர்கள். பிறரை நம்பி எந்த பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம். அஸ்தம்: எதிர்பார்த்த செயல்களில் பின்னடைவும் மறைமுக எதிர்ப்பும் உண்டாகும். அலைச்சல் அதிகரிக்கும். சித்திரை 1,2: மறைமுக தொல்லைகள் விலகும் என்றாலும் புதிய முயற்சிகள் எதுவும் இன்று வேண்டாம்.

துலாம்

சித்திரை 3,4: எதிர்பார்த்த செய்தி வந்து மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் இருந்த சங்கடம் நீங்கும். சுவாதி: உங்கள் எண்ணங்கள் எளிதாக நிறைவேறும். பொருளாதார நிலை உயரும். விசாகம் 1,2,3: வருமானம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையுடன் உண்டான பிரச்னை விலகும்.

விருச்சிகம்

விசாகம் 4: உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். வெளியூர் பயணம் வெற்றியாகும். ஆதாயம் அதிகரிக்கும். அனுஷம்: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரிசெய்வீர்கள். போட்டியாளர்கள் விலகுவார்கள். கேட்டை: நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். ஒரு பிரச்னையில் சாதகமான நிலை உண்டாகும்.

தனுசு

மூலம்: செயல்களில் சில தடைகளை சந்திப்பீர்கள். சிந்தித்து செயல்படுவதால் நன்மைகள் உண்டாகும். பூராடம்: கடும் முயற்சிக்குப்பின் உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். பெற்றோர் வழியே நன்மையுண்டு. உத்திராடம் 1: விலகிச் சென்ற உறவுகள் மீண்டும் தேடி வருவார்கள். நட்பால் ஆதாய நிலை ஏற்படும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: செயலில் இருந்த தடைகள் விலகும். உங்கள் ஆற்றல் வெளிப்படும். திருவோணம்: பண வரவில் இருந்த தடை விலகும். உடல்நிலையில் கவனம் செலுத்துவது நன்மையாகும். அவிட்டம் 1,2: சங்கடங்களை சந்தித்தாலும் முயற்சியில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள்.

கும்பம்

அவிட்டம் 3,4: திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். வெளியூர் பயணத்தால் ஆதாயம் தோன்றும். சதயம்: எதிர்பார்ப்புகள் எளிதாக நிறைவேறும். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். பூரட்டாதி 1,2,3: வாழ்க்கைத் துணையின் உடல்நிலையில் சங்கடங்கள் உண்டாகலாம். எதிர்பார்த்த பணம் வரும்.

மீனம்

பூரட்டாதி 4: வருமானத்தில் ஏற்பட்ட தடைகளை சரி செய்வீர்கள். உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும். உத்திரட்டாதி: உங்கள் வார்த்தைக்கு மதிப்புண்டாகும். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. ரேவதி: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பேச்சு வார்த்தையின் மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.