சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டு

#Arrest #Minister #Singapore #corruption #Case #Indian #lanka4Media #lanka4.com
Prasu
2 years ago
சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டு

சிங்கப்பூரில் போக்குவரத்து, வர்த்தகம் உள்ளிட்ட பல துறைகளில் அமைச்சராக இருந்தவர், இந்திய வம்சாவளியை சேர்ந்த சுப்ரமணியம் ஈஸ்வரன் (60).

கடந்த 2023 ஜூலை மாதம், அந்நாட்டின் ஆளும் கட்சியான பிஏபி (People's Action Party) கட்சியை சேர்ந்த ஈஸ்வரன் கைது செய்யப்பட்டார்.

பல கோடி ஊழல் செய்ததாக 27 குற்றச்சாட்டுக்கள் ஈஸ்வரன் மீது வழக்கு பதிவாகி, தற்போது அந்நாட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

 முக்கிய குற்றச்சாட்டாக, சிங்கப்பூரில் எஃப் 1 (F1) எனப்படும் அதிவேக கார் பந்தயத்தை ஆங் பெங் செங் (Ong Beng Seng) எனும் கோடீசுவரர் நடத்த ஈஸ்வரன் சட்டவிரோதமாக வழிவகை செய்ததாக கூறப்பட்டுள்ளது.

தான் செய்த உதவிக்கு பதிலாக ஈஸ்வரன், பல விமான பயணங்கள், சுற்றுலா, உலகின் பெரும் நட்சத்திர ஓட்டல்களில் பல முறை இலவசமாக தங்கும் வசதி, இலவச ஃபார்முலா 1 கார் பந்தய டிக்கெட்டுகள் உள்ளிட்ட பல சலுகைகளை 1,60,000 சிங்கப்பூர் டாலர் மதிப்பிற்கு அந்த கோடீசுவரரிடமிருந்து பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 27 குற்றச்சாட்டுகளிலும் "ஆங்" ஒரு குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4