பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 20 பேர் பலி

#Death #Accident #Thailand #fire #Factory #Workers #lanka4Media #lanka4.com #firecracker
Prasu
1 year ago
பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 20 பேர் பலி

மத்திய தாய்லாந்தில் அமைந்துள்ள பட்டாசு தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தலைநகர் பாங்கொக்கிலிருந்து வடக்கே 120 கிமீ தொலைவில் உள்ள சுபன் புரி மாகாணத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையிலேயே அந் நாட்டு நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. பட்டாசுக்கான கேள்வி அதிகளவில் உள்ள நிலையில், பெப்ரவரி 10 அன்று வரும் சீனப் புத்தாண்டுக்கு முன்பாக இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

 தாய்லாந்தில் பட்டாசு தொழிற்சாலை விபத்து அசாதாரணமானது அல்ல. 2023 ஆம் ஆண்டு தெற்கு நாராதிவாட் மாகாணத்தில் அமைந்துள்ள பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர் மற்றும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!