அனைவரையும் பயன் பெற அறிவுத்திருவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

#India #PrimeMinister #Tamil Nadu #Meeting #people #Benefits #இந்தியா #lanka4Media #lanka4_news #லங்கா4 ஊடகம் #lanka4.com #Lanka4indianews #Lanka4_india_news #Lanka4_india_tamil_news
அனைவரையும் பயன் பெற அறிவுத்திருவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

பெரும் பொருட்செலவில் நடக்கும் அறிவுத்திருவிழாவில் அனைவரும் பங்கேற்று பயன்பெறுங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக X தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; தமிழ்நாட்டில் நமது அரசு முன்னெடுக்கும் அறிவியக்கத்துக்கு அத்தாட்சியாக கடந்த ஆண்டு முதல் சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சியை நடத்தி வருகிறோம்.

 இந்த ஆண்டு சுமார் 40 உலக நாடுகள், 10 இந்திய மாநிலங்களின் பங்கேற்புடன் 50 மொழிகளைச் சேர்ந்த பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளும் #CIBF2024 இன்று தொடங்கி 18-ஆம் தேதி வரை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற இருக்கிறது.

images/content-image/1705414718.jpg

 தொழிற்கல்வி சார்ந்த 200 நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்படவுள்ளன.  பல்வேறு கருத்தரங்குகள், விவாதங்கள் நடைபெறுகின்றன. எழுத்தாளர்களுக்கும் வெளிநாட்டுப் பதிப்பு நிறுவனங்களுக்கும் இடையே பாலமாக 20 இலக்கிய முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4