2024ம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகும் இந்திய வம்சாவளி

#Election #America #President #Indian #lanka4Media #lanka4.com
Prasu
2 years ago
2024ம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகும் இந்திய வம்சாவளி

2024 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகுவதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி அறிவித்துள்ளார்.

 குடியரசுக் கட்சியின் வேட்பாளரை தேர்வு செய்ய நடந்த அயோவா மாகாண தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்தே ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகுவதாக விவேக் ராமசாரி அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், “நான் இன்றிரவு இந்த உண்மையை ஏற்றுக் கொள்கிறேன். இது கடுமையாகவே இருக்கிறது. ஆனாலும் ஏற்கிறேன். இன்று மக்களை ஆச்சரியப்படுத்தும் முடிவை எதிர்பார்த்தோம். அது கிட்டவில்லை” என தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ளது. இதில் குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளர் தேர்வில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், நிக்கி ஹாலே, இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4