ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீதான அமெரிக்க தாக்குதலுக்கு ஈரான் கண்டனம்

#America #Attack #Iran #condemn #rebel #House #RedSea #lanka4Media #lanka4.com
Prasu
2 years ago
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீதான அமெரிக்க  தாக்குதலுக்கு ஈரான் கண்டனம்

பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதற்கு ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இருந்து வரும் அவர்கள் செங்கடல் பகுதியில் சமீபகாலமாக இஸ்ரேல் துறைமுகங்களுக்கு செல்லும் சரக்கு கப்பல்கள் மீது ஏவுகணைகள், டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தி வருகின்றனர். 

இந்த தாக்குதலை உடனே நிறுத்துமாறு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை விடுத்தது. ஆனாலும் அவர்கள் அதை பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து கப்பல்களை குறி வைத்து தாக்கி வருகின்றனர்.

ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு பாடம் கற்பிக்கும் வகையில் அமெரிக்கா நேற்று தனது ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. இதையடுத்து ஏமன் நாட்டில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து படைகள் இணைந்து கடுமையான வான் வெளி தாக்குதலில் ஈடுபட்டது. ஹவுதி கிளர்ச்சியாளர்களின் இலக்குகளை குறிவைத்து இந்த அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டது. 

போர் விமானங்கள் மூலம் சரமாரியாக குண்டுகள் வீசப்பட்டன. இந்த தாக்குதலில் இருநாட்டு படைகளின் போர் விமானங்கள், போர் கப்பல்கள், நீர் மூழ்கி கப்பல்கள் ஈடுபட்டது. இதில் 5 பேர் பலியானதாகவும். 25-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்ததாகவும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் இந்த நடவடிக்கைக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் நாசர் கனானி கூறும் போது ஹவுதி கிளர்சியாளர்களுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நடத்தி வரும் தாக்குதல் தன்னிச்சையான நடவடிக்கையாகும், 

இது சர்வதேச சட்டம் மற்றும் ஒழுங்குமுறைகளை மீறும் செயலாகும் என்று தெரிவித்துள்ளார். செங்கடலில் கப்பல் போக்குவரத்து மீதான தாக்குதலை தொடர்ந்தால் ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் மீதான ராணுவ நடவடிக்கை தொடரும் என அமெரிக்க அதிபர் ஜோபைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4