சடுதியாக குறைவடைந்துள்ள இறைச்சி மற்றும் முட்டை கோழிகளின் விலைகள்!

#SriLanka #Mannar #children #prices #Food #Egg #Lanka4 #money
Mayoorikka
1 year ago
சடுதியாக குறைவடைந்துள்ள இறைச்சி மற்றும் முட்டை கோழிகளின் விலைகள்!

மன்னார் மாவட்டத்தில் இறைச்சி மற்றும் முட்டை கோழிகளின் விலைகள் சடுதியாக குறைத்துள்ளதாக கோழி இறைச்சி விற்பனை நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 நாடளாவிய ரீதியில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் அதிகரித்துவரும் நிலையில் குறிப்பாக மீன் மற்றும் மரக்கறிகளின் விலை உச்சம் தொட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் இறைச்சி கோழி மற்றும் முட்டை கோழி விலை குறைவடைந்துள்ளது.

 குறிப்பாக ஒரு கிலோ இறைச்சி கோழி 1,360 ரூபாவாகவும் முட்டை கோழி கிலோ 1,100 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 இறைச்சி கோழிக்கான விற்பனை விலை அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்படாத நிலையில் ஏனைய மாவட்டங்களில் 1,450-1,500 ரூபா வரையில் கோழி இறைச்சி விற்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!