நடிகர் கமலஹாசனின் 237வது படம் தொடர்பான வேலைகள் மும்முரம்

#Cinema #Actor #TamilCinema #Film #Lanka4 #திரைப்படம் #லங்கா4 #lanka4Media #lanka4_news #லங்கா4 ஊடகம் #lanka4.com
நடிகர் கமலஹாசனின் 237வது படம் தொடர்பான வேலைகள் மும்முரம்

கமல்ஹாசன் 237-வது படத்தை சண்டை பயிற்சியாளர்களான அன்பறிவ் சகோதரர்கள் இயக்குவார்கள் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து நாக் அஸ்வின் இயக்கும் ‘கல்கி2898ஏடி’ படத்தில் நடிக்க கால்ஷீட் ஒதுக்கியுள்ளார்.

 இதையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடிக்கும் ‘தக் லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், அவர் ஹெச்.வினோத் உடன் இணையும் படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கமலின் புதிய படமான ‘237’ படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.

images/content-image/1705135243.jpg

சண்டைப்பயிற்சியாளர்களாக கவனம் பெற்ற அன்பறிவ் சகோதரர்கள் இந்தப் படம் மூலம் இயக்குநர்களாக அறிமுகமாகின்றனர். மேலும் படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்த மற்ற அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது.

 அன்பறிவ் இரட்டையர்கள்: ‘கேஜிஎஃப்’ படத்துக்காக இவர்களுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. முன்னதாக ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ ‘விக்ரம்’, ‘லியோ’, படங்களில் ஸ்டண்ட் மாஸ்டர்களாக பணியாற்றிவர்கள் அடுத்து கமலின் லைன்அப்பில் உள்ள ‘இந்தியன் 2’, ‘கல்கி’, ‘தக் லைஃப்’ படங்களில் பணியாற்ற உள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4