பொருளாதார மீள்கட்டமைப்பிற்கான ஆயுதங்களை தமிழர் தாயத்திற்கு இந்தியா வழங்க வேண்டும்!

#India #SriLanka #shanakiyan #Lanka4 #lanka4Media #lanka4_news #lanka4.com
PriyaRam
1 year ago
பொருளாதார மீள்கட்டமைப்பிற்கான ஆயுதங்களை தமிழர் தாயத்திற்கு இந்தியா வழங்க வேண்டும்!

விடுதலைப் போராட்டத்திற்கு முன்னர் ஈழத்தமிழர்களுக்கு ஆயுதங்களை வழங்கிய இந்தியா தற்போதைய சூழ்நிலையில் பொருளாதார மீள்கட்டமைப்பிற்கான ஆயுதங்களையும் தமிழர் தாயகத்திற்கு வழங்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை வர்த்தக மையத்தில் இடம்பெற்ற அயலக தமிழர் தின விழாவில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

images/content-image/1705044436.jpg

மேலும், ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைக்காக தொடர்ந்து போராடிவரும் தாம் தமிழக முதல்வரிடமும் அரசியல் பிரமுகர்களிடமும் மேற்படி கோரிக்கைகளை முன்வைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்தியா மற்றும் தமிழகத்தின் சிறந்த ஆயுதமான பொருளாதரத்தை வைத்துக்கொண்டு ஈழத் தமிழர்களான எங்களுக்கு நிம்மதியான சிறந்த எதிர்காலத்தையும் தமது மக்களின் அபிலாசைகள் மற்றும் உரிமைகளைப் பெற்றுத் தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொருளாதாரம் என்னும் ஆயுதம் எதிர்காலத்தில் தமிழர்களின் இருப்பினை வலுப்பெறச்செய்வதற்கான வழியமைத்துக்கொடுக்கும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!