தமிழினத்தை அழிக்கும் போதைக்கு யார்தான் காரணம்? சட்டத்தரணிகள் என்ன செய்ய வேண்டும்!

#SriLanka #Jaffna #NorthernProvince #Death #Police #drugs #Lanka4 #Youngster
Mayoorikka
3 months ago
தமிழினத்தை அழிக்கும் போதைக்கு யார்தான் காரணம்? சட்டத்தரணிகள் என்ன செய்ய வேண்டும்!

யுத்தத்தினால் தமிழினத்தினை அழித்த காலம் மாறி தற்பொழுது போதையினால் தமிழ் இனத்தினை அழிக்கும் காலம் உருமாறியுள்ளது.

 தமிழர்பகுதியில் சமீபத்தில் போதைவஸ்து பாவனை திட்டமிட்டு திணிக்கப்படும் பிரச்சனையாக காணப்படுகிறது. கலை ,பண்பாடு , பாரம்பரியத்திற்கு பேர் போன யாழ்ப்பாணத்தில் கூட போதைக்கு பாவனைக்கு இளைஞர்கள் அடிமையாகி இருப்பது மிகுந்த வேதனைக்குரிய விடையம்.

 போரில் பல இளைய தலைமுறைகளை இழந்து இருக்கின்ற இந்த நிலையிலே அதனை தொடர்ந்து இளைய தலைமுறைகள் போதைவஸ்துக்கு ஆளாகி மரணத்தைச் சந்தித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

இந்த போதைவஸ்து பாவனையானது இன்று கட்டுக்கு அடங்காமல் இளைய தலைமுறையினரிடத்தே அதிகரித்து செல்கின்றது. அண்மையில் கூட 21 வயது மதிக்கத்தக்க யுவதி ஒருவரை அவரது அம்மம்மா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்து புனர்வாழ்வு அளித்து தரும்படி கேட்டுக்கொண்டுள்ளார். 

மிகவும் கல்வியில் முன்னுக்குள்ள பிள்ளைங்கள் கூட கீழ்த்தரமான போதைக்கு அடிமையாகி திக்குத் தெரியாமல் திசைமாறி உள்ளனர். இதற்கு யார்தான் காரணம்.. பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் கை கட்டி வேடிக்கைபார்த்துக் கொண்டும் கண்டும் காணாமல் விடுவதினால் நம் எதிர்கால சந்ததியினரின் அழிவு சக்தியாக போதை உருவெடுத்துள்ளது.

 இவற்றுக்கு மக்கள் பிரதிநிதிகளோ,கல்விமான்களோ,சமூகப் பொறுப்புணர்வு உடையவர்களோ சரியான முறையில் அக்கறை எடுக்காத காரணத்தினால் இது அதிகரித்து செல்கின்றது. யார் இதை செய்விக்கிறார்கள் ? எவ்வாறு இவர்களுக்கு விரைவாக வந்து சேர்கின்றது? போதைவஸ்துக்கு அடிமையானவர்களுக்கு மாற்று வழி என்ன? என்று சிந்திக்க வேண்டும். 

 இலங்கையில் போதைவஸ்து பாவனையினை முழுமையாக தடுத்து நிறுத்துவதற்கு வழிகளை கையாளா விட்டால் மிகப்பெரிய ஆபத்தை இந்த நாடு சந்திக்கும். நீதி மன்றங்கள் கூட பல தடவைகள் போதைவஸ்து பாவனையாளர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கண்டித்துள்ளது.

 ஆனால் சமூகத்தின் முக்கியஸ்தர்கள், பொலிஸ் பொறுப்பதிகாரிகள் ,பிரதேச செயலகங்கள் மக்கள் பிரதிநிதிகளான பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயங்கள் தொடர்பாக ஒன்று கூடி இதுவரை ஒரு ஆக்க பூர்வமான எடுக்காத காரணத்தினால் எங்கள் சமுதாயம் மிக கேவலமான நிலைக்கு வந்து விட்டது.

 மக்கள் பிரதிநிதிகளோ,கல்விமான்களோ,சமூகப் பொறுப்புணர்வு உடையவர்களோ சரியான முறையில் அக்கறை எடுக்காத காரணத்தினால் தமிழர் பகுதியில் இது அதிகரித்து செல்கின்றது.

 அதேவேளை போருக்கு பிற்பாடு பல இளைய தலைமுறைகளை நாம் இழந்து இருக்கின்ற இந்த நிலையிலே தொடர்ந்து இளைய தலைமுறைகள் அநியாயமாக போதைவஸ்துக்கு ஆளாகி மரணத்தைச் சந்தித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

இந்த போதைவஸ்து பாவனையானது இன்று கட்டுக்கு அடங்காமல் இளைய தலைமுறையினரிடத்தே அதிகரித்து செல்கின்றது.. பல்கலைக்கழக மாணவர்கள் கூட போதைவஸ்துக்கு அடிமையாகி இருக்கிறார்கள். 

 நாடளாவிய ரீதியில் இந்த போதைவஸ்து பிரச்சனை கட்டுக்கடங்காமல் வேகமாக பரவியுள்ளது. ,இதில் கூடுதலாக தமிழ் இளைஞர்களே பாதிக்கப்படுகிறார்கள்.

 இதற்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள்  அவசரமான தீர்மானத்தினை ஒற்றுமையாக ஒன்று கூடி இதனை தடுப்பதற்கு என்ன வழி என இதுவரைக்கும் சரியாக ஆராய்ந்ததில்லை.

 கிராம மட் டங்களில் இருந்து கூட்டத்தினை நடாத்தி தமிழர்களுடைய பகுதியிலே கூடுதலான அளவில் போதைவஸ்து பாவனை நிலவுவதற்கான என்ன காரணங்கள் என கண்டறிந்து அதைத் தடுப்பதற்கான சரியான வழியினை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கண்டறியவேண்டும்.

 மக்கள் பிரதிநிதிகள் ,பிரதேச செயலகங்களின் தலைவர்கள் ,பிரதேச சபைகள் ,மாநகரசபைகள்,பெரியோர்கள் என எல்லோரும் ஒன்றிணைந்து தமிழர்களிடையே தாண்டவம் ஆடுகின்ற இந்த போதைவஸ்துவினை உடனடியாக தடுத்து நிறுத்துவதற்கு ஆவணம் செய்ய வேண்டும்.

 மிக முக்கியமாக காசுக்காக போதைவஸ்து பாவனைக்கு உள்ளாகிய நபர்களை வெளியே எடுத்து விடும் சட்டத்தரணிகள் நமது நாட்டினையும் எதிர்கால சந்ததியினரையும் கருத்தில் கொண்டு அவர்களுக்காக வாதாடுவதை நிறுத்த வேண்டும். 

சட்டத்தரணிகள் பொலிஸார் பிடித்துக் கொடுத்த போதைவஸ்து பாவனையாளரையோ விநியோகஸ்தரையோ வெளியே எடுத்து விட்டால் மீண்டும் மீண்டும் அவர்கள் போதையை விநியோகிப்பார்கள் பாவிப்பார்கள். மீண்டும் அது பரவி நம் சந்ததியினரையே அழித்து விடும். 

அதனால் மிக முக்கியமாக சட்டத்தரணிகள் இதை ஆழ்ந்து யோசிக்க வேண்டும். அல்லது இவ்வாறு போதைப்பாவனைக்கு துணை போகும் சட்டத்தரணிகளை மக்கள் ஒதுக்கி வைக்கவேண்டும். அவ்வாறு ஒதுக்காதவரை போதைப்பவனை தவறு செய்பவன் தொடர்ந்து சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்து போதைவஸ்தை மீண்டும் மீண்டும் விநியோகித்துக் கொண்டே இருப்பான்.