பிரேசிலில் லாரி மற்றும் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 25 பேர் பலி

#Death #Accident #Hospital #Bus #Road #Brazil #Rescue #lanka4Media #lanka4.com
Prasu
2 years ago
பிரேசிலில் லாரி மற்றும் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 25 பேர் பலி

பிரேசில் நாட்டின் வடகிழக்கு மாநிலம் பாஹியா. இந்த மாநிலத்தின் வடக்கு கடற்கரை நகரான குவாராஜூபாவில் உள்ள கடற்கரைக்கு ஒரு மினி பேருந்தில் பலர் சுற்றுலா சென்றிருந்தனர். 

அவர்கள் சுற்றுலாவை முடித்துக் கொண்டு ஜாக்கோபினா நகருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

சயோ ஜோஸ் டோ ஜேக்குயூப் நகர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மினி பேருந்து வந்து கொண்டிருக்கும்போது, லாரி ஒன்று திடீரென மினி பேருந்து மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் 25 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

25 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து ஜாக்கோபினா நகராட்சி மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. முந்திச் செல்லும்போது விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4