கேப்டன் மில்லர் திரைப்படத்தை இணைய தளங்களில் வெளியிட தடை

#Court Order #TamilCinema #Chennai #Banned #Movie #Kollywood #Internet #lanka4Media #lanka4.com
Prasu
4 months ago
கேப்டன் மில்லர் திரைப்படத்தை இணைய தளங்களில் வெளியிட தடை

தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் 'கேப்டன் மில்லர்'. அருண் மாதேஸ்வரன் இயக்கி இருக்கும் இந்த படம் ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

இந்நிலையில், 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதை தடுக்க உத்தரவிடக் கோரி சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 

இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது, சத்யஜோதி பிலிம்ஸ் பட நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியம் ஆஜராகி படத்தை சட்டவிரோதமாக வெளியிடுவதால், தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், திரையங்கத்தினர் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்படுவார்கள் என்பதால், தகுந்த தடை உத்தரவை பிறப்பிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

 இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, 'கேப்டன் மில்லர்' படத்தை 1166 இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிட தடைவிதித்து உத்தரவிட்டதுடன், தகுந்த நடவடிக்கைகளை தனியார் மற்றும் அரசு இணையதள சேவை வழங்கும் நிறுவனங்கள் மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளது.