கப்டன் மலரவனின் தயாரான மலரன்னையின் நூல் வெளியீடும் அமுதவிழாவும்!

#SriLanka #Jaffna #Lanka4 #release #Public #books #Poetry_Book
Mayoorikka
1 year ago
கப்டன் மலரவனின் தயாரான மலரன்னையின் நூல் வெளியீடும் அமுதவிழாவும்!

ஜீவநதி ஏற்பாட்டில் எழுத்தாளர் மலரன்னையின் அமுதவிழாவும், மலரன்னையின் வாழ்வும் படைப்பும் நூல் வெளியீடு நிகழ்வு 08.01.2024 திங்கட்கிழமை மாலை 3.30 மணியளவில் திருநெல்வேலியில் உள்ள ராஜா கிறீம்கவுஸ் சரஸ்வதி மண்டபத்தில் இடம்பெற்றது. 

 எழுத்தாளரும், சமூக செயற்பாட்டாளருமான கோகிலா மகேந்திரன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் வரவேற்புரையினை இரா. குலசிங்கம் அவர்களும் வெளியீட்டுரையினை விரிவுரையாளர் புலோலியூர் வேல்நந்தகுமார் அவர்களும் நிகழ்த்தினர். 

images/content-image/2023/01/1704812549.jpg

 தொடர்ந்து நூல் வெளியீடு இடம்பெற்றது. மலரன்னையின் வாழ்வும் படைப்பும் நூலினை ஜீவநதி ஆசிரியர் பரணீதரன் வெளியிட்டு வைக்க மலரன்னை அவர்கள் நூலினை பெற்றுக் கொண்டார்கள்.

images/content-image/2023/01/1704812572.jpg

 மலரன்னையின் சிறுகதைகள் பற்றி எழுத்தாளர் பிரேமினியும், மலரன்னையின் நாவல்கள் என்கிற தலைப்பில் விரிவுரையாளர் அஜந்தகுமாரும் சிற்றுரை நிகழ்த்தினர். அமுத விழா நாயகிக்கான கௌரவிப்பினை ஜீவநதி பதிப்பகத்தின் உரிமையாளரும் ஜீவநதி இதழின் ஆசிரியருமான கலாமணி பரணீதரன் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். 

images/content-image/2023/01/1704812597.jpg

 தொடர்ந்து இந்துநாகரீகத்துறை தலைவரான சுகந்தினி முரளீதரன் அவர்கள் மாலையணிவிப்பு செய்து கௌரவித்தார். ஜீவநதி பதிப்பகத்தின் ஏற்பாட்டிலான தமிழர் ஈழ இலக்கிய தாய் என்கிற கௌரவ விருதினை அம்மாவுக்கு மூத்த எழுத்தாளர் அ. ஜேசுராசா வழங்கி வைத்தார்.

 நூல் பற்றிய கருத்துரையினை எழுத்தாளர் மயூரரூபனும் நிகழ்த்தினர். அதனை தொடர்ந்து ஊரவர்கள், வாசகர்கள், நலன்விரும்பிகள் என பலரும் பொன்னாடை போர்த்தி அவரை வாழ்த்தி கௌரவம் வழங்கினர். 

 இறுதியாக ஏற்புரையினையும் நன்றியுரையினையும் திருமதி அற்புதராணி காசிலிங்கம் (மலரன்னை) அவர்கள் நிகழ்த்தினார். போராளி எழுத்தாளரும் மாவீரருமான கப்டன் மலரவனின் தாயார் மலரன்னை என்பது குறிப்பிடத்தக்கது.

images/content-image/2023/01/1704812625.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!