அழகோ?
#SriLanka
#Poems
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
சித்திர சிலை அழகோ?
கண்ணம்மா
சிதறிய கல்லழகோ?
முத்தெனும் முகமழகோ?
சொல்லம்மா
முகிலெனும் மனமழகோ?
எத்தனை குணமழகோ?
என்னம்மா
கை ஏந்திய உறவழகோ?
சுட்டதோர் சுடரழகோ?
செல்லம்மா
சுடர் தரும் இரவழகோ?
வட்டமாய் நிலவழகோ?
வாழ்வம்மா
வாடும் நல் நினைவழகோ?
வர்ணமாய் வாழ்வழகோ?
எதிர்
ஒளி மறை விழி அழகோ?
இறை தரும் வாழ்வதிலே
எத்தனை சுகமதிலே
குறை தரும் போர் எதிரே
கொடுத்தால்..............................
வாழ் நல் சுகம் எதிலே?
நன்றி : வி.அபிவர்ணா,
முல்லைத்தீவு.4