உக்ரைனின் கிழக்கு பகுதியை குறிவைத்து தாக்கிய ரஷ்யா : கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை!

#SriLanka #War #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #Russia Ukraine
Thamilini
2 years ago
உக்ரைனின் கிழக்கு பகுதியை குறிவைத்து தாக்கிய ரஷ்யா : கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை!

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர்.

 உயிரிழந்தவர்களில் 05 சிறுவர்களும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

கிழக்கு உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்புடைய தாக்குதலுக்குப் பிறகு, உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலென்ஸ்கி, இதுபோன்ற தாக்குதல்களின் விளைவுகளை ரஷ்யா அனுபவிக்க வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளார். 

எவ்வாறாயினும், இந்த தாக்குதல் தொடர்பில் ரஷ்யா இதுவரையில் எவ்வித அறிக்கையும் வெளியிடவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4