காஸா போர் நிறுத்தத்திற்கு வலியுறுத்தியுள்ள ஐ.நா. மனிதாபிமான உதவிகள் குழுவின் தலைவர்

#UN #Israel #War #leader #Hamas #Gaza #condemn #lanka4Media #lanka4.com
Prasu
2 years ago
காஸா போர் நிறுத்தத்திற்கு வலியுறுத்தியுள்ள ஐ.நா. மனிதாபிமான உதவிகள் குழுவின் தலைவர்

இஸ்ரேல் - காஸா போர் தொடங்கி 90 நரக நாட்கள் கடந்துவிட்டன. காஸா தற்போது மனிதர்கள் வாழ்வதற்குத் தகுதியில்லாத இடமாக மாறிவிட்டது என ஐ.நா. மனிதாபிமான உதவிகள் குழுவின் தலைவர் மார்டின் க்ரிஃபித்ஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை போர் நிறுத்தத்திற்கும் வலியுறுத்தியுள்ளார். “ஹமாஸ் - இஸ்ரேல் போர் ஆரம்பமாகி மூன்று மாதங்கள் நிறைவடைந்துவிட்டன. இந்நிலையில் தற்போதும் அங்குள்ள மக்கள் அன்றாடம் உயிருக்கு ஆபத்தான சூழலில் வாழ்கின்றனர்.

ஆனால் இந்த உலகம் அதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. உடனடியாக போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். மனிதாபிமான உதவிகளைச் செய்யச் சொல்வோருக்கும் 20 இலட்சம் மக்களுக்கு உதவுவது என்பது பெரும் சவாலாக உள்ளது.

இதுவரை ஐ.நா உதவிக் குழுவைச் சேர்ந்த 142 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தப் போர் தொடங்கியிருக்கவே கூடாது. இப்போது இதனை முடிக்கும் காலம் நெருங்கிவிட்டது. உடனடியாகப் போரை நிறுத்த வேண்டும். 

காஸா மக்களுக்காக மட்டுமல்ல இனிவரும் சந்ததிகளை மனதில் கொண்டும் போரை நிறுத்த முற்படவேண்டும். இந்த 90 நாட்களும் நரக நாட்களே. நடந்தவை எல்லாமே மனிதாபிமானத்தின் மீதான தாக்குதல்கள் மட்டுமே. அனைத்துத் தரப்புகளையும் ஒன்றிணைத்து சர்வதேச சட்டத்தின் கீழ் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

 அப்பாவி பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களின் அத்தியாவசியத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். அனைத்து பிணைக் கைதிகளும் நிபந்தனைகளின்றி விடுவிக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4