உண்மை சம்பவம் ஜெர்க் எனும் பெயரில் திரைப்படமாக வெளிவருகிறது
#Cinema
#TamilCinema
#Film
#Lanka4
#திரைப்படம்
#லங்கா4
#உண்மை
#true
#தமிழ்
#lanka4Media
#lanka4_news
#லங்கா4 ஊடகம்
#lanka4.com
Mugunthan Mugunthan
1 year ago
அப்புகுட்டி, நாடோடிகள் பரணி, குமரவடிவேல், ஃபிராங் ஸ்டார் ராகுல், காயத்ரி, சித்து குமரேசன் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘ஜெர்க்’. 2கே புரொடக் ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை குரு இயக்கியுள்ளார்.
ஆலன் பரத் ஒளிப்பதிவு செய்துள்ளார். தரண் குமார் இசை அமைத்துள்ளார். கு.கார்த்திக் பாடல்கள் எழுதியுள்ளார். படம் பற்றி இயக்குநர் குரு கூறும்போது, “முப்பது வருடங்களுக்கு முன்பு தொலைத் தொடர்பு இல்லாத காலத்தில் தமிழகத்தின் மலைப்பிரதேசம் ஒன்றில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து த்ரில்லர் படமாக இது உருவாகி இருக்கிறது.

ஊட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம். இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன” என்றார்.