நோர்வேயில் தமிழ் பெண் ஒருவர் படுகொலை!

#SriLanka #world_news #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #Norway
Thamilini
2 years ago
நோர்வேயில் தமிழ் பெண் ஒருவர் படுகொலை!

நோர்வே நாட்டில் தமிழ் பெண் ராகவி வரதராஜன் கடந்த செவ்வாய்க்கிழமை (02.01.2024) அன்று படுகொலை செய்யப்பட்டுள்ளார். 

நோர்வேயின் எல்வெரும் (Elverum) என்னும் பகுதியில் குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவர் புத்தாண்டு தினத்தன்று படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் உயிரிழந்த பெண்ணின் உடலில் பல துப்பாக்கி சூடு காயங்கள் இருந்ததாகவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

சடலம் கண்டெடுக்கப்பட்ட காரிலிருந்து கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

கொலை மிரட்டல் தொடர்பில் உயிரிழந்த பெண் பல தடவைகள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்ததோடு அது தொடர்பில் உரிய முறையில் கவனம் செலுத்தவில்லை என குடும்பத்தினர் முன்னதாக குற்றம் சுமத்தியுள்ளனர். 

images/content-image/1704506814.jpg

32 வயதான ராகுல் யோகராஜா என்பவரே மேற்படி கொலை அச்சுறுத்தல் விடுத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பில் யுவதி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இந்நிலையில் குறித்த பெண்ணை தொடர்புக்கொள்ள இளைஞருக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

இந்நிலையில் குறித்த  இளைஞன் தடை உத்தரவையும் மீறி 07 முறை ராகவியை சந்தித்துள்ளதாக தெரியவந்துள்ளது.  இவர் பல்மருந்துவர் என்பதோடு நீண்ட காலமாக இவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குற்றம் சாட்டப்பட்ட ஆண் (32) படுகாயமடைந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவித்துள்ள பொலிஸார் , இருவருக்கும் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருப்பதாகவும் கூறியுள்ளனர். 

இது தொடர்பில் நோர்வே பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4