மீண்டும் பாகிஸ்தான் பொது தேர்தல் ஒத்திவைப்பு

#Election #Pakistan #Election Commission #Public #lanka4Media #lanka4.com
Prasu
2 years ago
மீண்டும் பாகிஸ்தான் பொது தேர்தல் ஒத்திவைப்பு

பாகிஸ்தான் நாட்டில் பிப்ரவரி மாதம் 8-ம் தேதி பொது தேர்தல் நடத்துவதற்கு அந்நாட்டு தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. 

இதுதொடர்பாக ஏராளமான பிரச்சினைகள் ஏற்பட்ட நிலையில், பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் அறிவிக்கப்பட்ட தேதியில் தேர்தலை நடத்தி முடிக்க அந்நாட்டு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு இருந்தது.

இந்த நிலையில், பாகிஸ்தானில் அடுத்த மாதம் நடைபெற இருந்த பாராளுமன்ற தேர்தல் ஒத்திவைக்கப்படுகிறது. இதற்கான தீர்மானம் அந்நாட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. 

பாராளுமன்ற தேர்தலை ஒத்திவைக்க கோரும் தீர்மானத்திற்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப், பாகிஸ்தான் தகவல் தொடர்பு துறை மந்திரி முர்தாசா சோலங்கி எதிர்ப்பு தெரிவித்தனர்.

 தீர்மானத்தின் படி பாகிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளில் கடுமையான குளிர்காலம் நிலவுவதால், மக்கள் வாக்களிக்க அதிக எண்ணிக்கையில் வர முடியாத சூழல் ஏற்படலாம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4