நன்னடத்தை பாடசாலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு விளக்கமறியல் நீட்டிப்பு!

#SriLanka #Court Order #Kalmunai #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
நன்னடத்தை பாடசாலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு விளக்கமறியல் நீட்டிப்பு!

நன்னடத்தை பாடசாலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கைதான அப் பாடசாலையின் மேற் பார்வையாளரான பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. 

மேலும் இது  தொடர்பான வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 17 ஆம் திகதி வரை மறு விசாரணைக்காக ஒத்தி வைக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

images/content-image/1704371696.jpg

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தார். 

இது தொடர்பான வழக்கு நேற்று (03.01) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன்  மரணமடைந்த சிறுவனின் தந்தை சகோதரி ஆகியோர் நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தந்திருந்ததுடன் பொலிஸார் மற்றும் பிரதிவாதியின் சட்டத்தரணி ஆகியோரின் விண்ணப்பங்கள் ஆராயப்பட்டு 28 வயதுடைய குறித்த பாடசாலையின் மேற்பார்வையாளரான பிறின்ஸி புலேந்திரன் என்பவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!