வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட ஹசீஸ் போதைப்பொருள் கண்டுப்பிடிப்பு!

#SriLanka #drugs #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட ஹசீஸ் போதைப்பொருள் கண்டுப்பிடிப்பு!

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட 6 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான ஹசீஸ் போதைப்பொருளின்  ஒரு தொகுதி சீதுவ பிரதேசத்தில் உள்ள பொருட்களை அகற்றும் நிலையம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  

இத்தாலியில் இருந்து ஹோமாகம பிரதேசத்தில் உள்ள முகவரிக்கு அனுப்பப்பட்ட பார்சலில் சுங்க வருமான கண்காணிப்பு பிரிவினர் போதைப் பொருளை கண்டுபிடித்துள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர்  சிவலி அருக்கோட தெரிவித்தார்.  

உணவாக அறிவிக்கப்பட்ட அந்த பார்சலில் 61 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 4 கிலோ 91 கிராம் ஹஷிஸ் போதைப்பொருள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

சுங்கத்திலிருந்து பொதியை அகற்ற வந்த முகவர் ஒருவர் அங்கு கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக சுங்கப் பேச்சாளர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!