துணிச்சலாக இறங்கி வெற்றி அடையும் கடக ராசியினர் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #lanka4Media #lanka4.com
Prasu
3 months ago
துணிச்சலாக இறங்கி வெற்றி அடையும் கடக ராசியினர் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: தடைகளைக் கடந்து நினைத்ததை சாதிப்பீர்கள். பழைய பிரச்னை முடிவிற்கு வரும். பரணி: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு சரியாகும். வியாபாரத்தில் உண்டான தடைகளை சரி செய்வீர்கள். கார்த்திகை 1: நண்பர்கள் ஒத்துழைப்பால் உங்கள் செயல் வெற்றியாகும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: குடும்பத்தினர் ஆதரவு அதிகரிக்கும். குழந்தைகள் வளர்ச்சி உங்களுக்குப் பெருமையை உண்டாக்கும். ரோகிணி: பழைய செயல் ஒன்றில் ஆதாயம் உண்டாகும். பெரியோரின் பாராட்டிற்கு ஆளாவீர்கள். மிருகசீரிடம் 1,2: மற்றவர்களின் பலம் பலவீனம் தெரிந்து அதற்கேற்ப செயல்பட்டு வெற்றியடைவீர்கள்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: அலைச்சல் அதிகரிக்கும். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த ஒரு முயற்சி நிறைவேறும். திருவாதிரை: வியாபாரத்தில் எதிர்பாராத நெருக்கடி தோன்றும். தாய்வழி உறவினர்களின் ஆதரவு நன்மை தரும். புனர்பூசம் 1,2,3: பணியாளர்களுக்கு நெருக்கடி அதிகரிக்கும். மேலதிகாரியின் கேள்விக்கு பதில் சொல்ல நேரும்.

கடகம்

புனர்பூசம் 4: உங்கள் முயற்சி லாபமாகும். நண்பர்கள் ஆதரவால் ஒரு பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். பூசம்: எதிர்பார்த்த உதவி வந்து சேரும். சிந்தித்து செயல்பட்டு ஈடுபடும் செயலில் வெற்றி காண்பீர்கள். ஆயில்யம்: ஒரு செயலில் துணிச்சலாக இறங்கி வெற்றி அடைவீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்னை தீரும்.

 சிம்மம்: 

மகம்: உடல்நிலையில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். வியாபாரப் பிரச்னைகளை முடிவிற்கு கொண்டு வருவீர்கள். பூரம்: தொழிலில் உண்டான போட்டியை சரிசெய்வீர்கள். உங்கள் முயற்சி ஆதாயத்தை ஏற்படுத்தும். உத்திரம் 1: வார்த்தைகளில் நிதானம் தேவை. வரவு செலவில் சில சங்கடங்கள் தோன்றும். 

கன்னி

உத்திரம் 2,3,4: மனதில் இனம்புரியாத குழப்பம் தோன்றும். வியாபாரத்தை விரிவுசெய்யும் முயற்சி இழுபறியாகும். அஸ்தம்: புதிய நண்பர்களால் உங்கள் தேவைகள் நிறைவேறும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். சித்திரை 1,2: திட்டமிட்டு செயல்படுவீர்கள். தொழிலை விரிவு செய்யும் முயற்சி நிறைவேறும். நிதிநிலை உயரும். 

துலாம்

சித்திரை 3,4: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். பண நெருக்கடியால் சங்கடங்களுக்கு ஆளாவீர்கள். சுவாதி: மனதில் இருந்த குழப்பம் விலகும். குடும்பத்தினர் உங்களை நெருக்கடிக்கு ஆளாக்குவார்கள். விசாகம் 1,2,3: இழுபறியாக இருந்த வழக்கு வெற்றியாகும். நண்பருடன் இருந்த கருத்து வேறுபாடு விலகும். 

விருச்சிகம்

விசாகம் 4: இழுபறியாக இருந்த செயல்கள் நிறைவேறும். வராமல் இருந்த பணம் உங்களைத் தேடி வரும். அனுஷம்: பிரபலங்கள் துணையுடன் உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். சொத்து சிக்கல்கள் தீரும். கேட்டை: நீங்கள் விரும்பியதை இன்று அடைவீர்கள். எதிர்பாராத வருவாயால் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

தனுசு

மூலம்: தொழிலில் உண்டான நஷ்ட நிலைக்கு தீர்வு காண்பீர்கள். உங்கள் அணுகுமுறை ஆதாயத்தை ஏற்படுத்தும். பூராடம்: புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். உத்திராடம் 1: பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். 

மகரம்

உத்திராடம் 2,3,4: மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தடைகளை விலக்கி முயற்சியில் வெற்றி காண்பீர்கள். திருவோணம்: திட்டமிட்டபடி செயல்படுவீர்கள். நிறைவேறாமல் இருந்த உங்கள் முயற்சி நிறைவேறும். அவிட்டம் 1,2: செய்து வரும் தொழிலில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். 

கும்பம்

அவிட்டம் 3,4: உங்களின் எதிர்பார்ப்பு இழுபறியாகும். சட்டத்திற்கு விரோதமான செயல்கள் சங்கடத்தை ஏற்படுத்தும். சதயம்: பணியிடத்தில் வீண் பிரச்னை தோன்றும். நீங்கள் சங்கடப்படும் வகையில் சில செயல் இன்று நடந்தேறும். பூரட்டாதி 1,2,3: மனக்குழப்பம் அதிகரிக்கும். பழைய பிரச்னை ஒன்று மீண்டும் தலையெடுக்கும். 

மீனம்

பூரட்டாதி 4: புதிய நட்புகள் விஷயத்தில் எச்சரிக்கை தேவை. ஆசைகளுக்கு இடம் தராமல் வேலை செய்யுங்கள். உத்திரட்டாதி: பணியிடத்தில் வீண் பிரச்னை தோன்றும். குடும்பத்திற்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி உண்டாகும். ரேவதி: வெளிநாட்டு முயற்சி ஆதாயமாகும். எதிர்பாராத வரவு உங்களைத் தேடிவரும்.