தென்கொரியாவின் எதிர்கட்சி தலைவர் மீது கத்தி குத்து தாக்குதல்!

#SriLanka #world_news #SouthKorea #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
தென்கொரியாவின் எதிர்கட்சி தலைவர் மீது கத்தி குத்து தாக்குதல்!

தென் கொரிய எதிர்க்கட்சித் தலைவர் கத்தி குத்துக்கு இலக்காகி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தென்கொரிய எதிர்க்கட்சித் தலைவரான லீ ஜே மியாங், பூசன் நகரத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோது மேற்படி தாக்குதல் இடம்பெற்றுள்ளது. 

இதில் அவர் கழுத்தில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளார். 

இந்த தாக்குதலை நடத்திய 50 முதல் 60 வயதுக்கு இடைப்பட்ட நபரை போலீசார் கைது செய்தனர். கையொப்பம் பெறுவதாக கூறி எதிர்க்கட்சித் தலைவரை தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

2022 ஜனாதிபதித் தேர்தலில் வலுவான பங்கு வகித்த லீ ஜே மியாங் குறைந்த எண்ணிக்கையிலான வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4