2024 ஆம் ஆண்டில் தமிழர்களுக்கு தீர்க்கமான முடிவு! புத்தாண்டு செய்தியில் சம்பந்தன்

#SriLanka #R. Sampanthan #Tamil People #Lanka4 #TNA
Mayoorikka
1 year ago
2024 ஆம் ஆண்டில் தமிழர்களுக்கு தீர்க்கமான முடிவு! புத்தாண்டு செய்தியில் சம்பந்தன்

பிறந்துள்ள 2024 ஆம் ஆண்டு தமிழர்களாகிய எமக்குத் தீர்க்கமான முடிவுகளை எடுக்கக் கூடிய ஆண்டாக இருக்கும் என்று நம்புகின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

 இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

 "மலர்ந்துள்ள 2024 ஆம் ஆண்டானது இன, மத, கட்சி வேறுபாடின்றி நாட்டு மக்களுக்குச் சமாதானம், மகிழ்ச்சி, சுபீட்சம் மிக்கதாக அமைய வேண்டும். இந்த ஆண்டு தமிழ் மக்களுக்கு நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் கொண்டு வருகின்ற ஆண்டாகத் திகழ வேண்டும்.

 இந்தப் புதிய ஆண்டிலாவது புதிய அரசமைப்பின் ஊடாகத் தீர்வு காணப்பட வேண்டும். ஆட்சியில் எந்த அரசு இருந்தாலும் இந்த விடயத்தில் உரிய கவனம் செலுத்த வேண்டும். 

இல்லையேல் தமிழர்களாகிய நாம் தீர்க்கமான முடிவுகளை இந்த ஆண்டில் எடுப்போம். அனைவருக்கும் எனது இனிய புதுவருட வாழ்த்துக்கள் எனவும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!