குலதெய்வ வழிபாட்டில் ஈடுபடும் விருச்சிக ராசியினர் - இன்றைய ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #lanka4Media #lanka4_news #lanka4.com
Prasu
4 months ago
குலதெய்வ வழிபாட்டில் ஈடுபடும் விருச்சிக ராசியினர் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி: உங்கள் செயல்களில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றி உண்டாகும். சங்கடங்கள் விலகும். பரணி: நீங்கள் ஈடுபடும் முயற்சியில் லாபம் தோன்றும். சொத்து விவகாரத்தில் உண்டான பிரச்னை தீரும். கார்த்திகை 1: தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீங்கள் நினைத்ததை செய்து முடிப்பீர். எதிர்பார்ப்பு நிறைவேறும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். இழுபறியாக இருந்த செயல் நிறைவேறும். ரோகிணி: வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். உங்கள் முயற்சியில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். மிருகசீரிடம் 1,2: சுறு சுறுப்பாக செயல்பட்டு நீங்கள் எண்ணியதை அடைவீர். உங்கள் செல்வாக்கு உயரும்.

மிதுனம்:

மிருகசீரிடம் 3,4: உங்கள் செயல்களில் சில நெருக்கடி தோன்றும். சிந்தித்து செயல்படுவீர்கள். திருவாதிரை: மனதில் தேவையற்ற பயம் வரும். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் இழுபறியாகும். புனர்பூசம் 1,2,3: உங்கள் செயலில் தடை உண்டாகும். போட்டியாளர்களால் சங்கடம் தோன்றும்.

கடகம்

புனர்பூசம் 4: எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர். உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். பூசம்: உங்கள் பேச்சாற்றலால் இழுபறியாக இருந்த ஒரு பிரச்னையை முடிவிற்கு வரும். ஆயில்யம்: வேலை பளு அதிகரிக்கும். பெரியோர் ஆதரவால் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும்.

சிம்மம்:

மகம்: எதிர்பார்த்த வரவு வரும். குடும்ப நெருக்கடி குறையும்.முயற்சியில் முன்னேற்றம் தோன்றும். பூரம்: வியாபாரத்தை மாற்றம் செய்வது குறித்து யோசிப்பீர்.உங்கள் எண்ணம் நிறைவேறும். உத்திரம் 1: உங்கள் எண்ணம் பூர்த்தியாகும். வேலையாட்களால் ஆதாயம் அதிகரிக்கும்.

கன்னி

உத்திரம் 2,3,4: வியாபாரத்தில் இருந்த தடை விலகும். போட்டியாளர்களால் ஏற்பட்ட நெருக்கடி முடியும். அஸ்தம்: நண்பர்கள் உதவியுடன் உங்கள் செயலில் ஆதாயம் காண்பீர். பொருளாதார நெருக்கடி விலகும். சித்திரை 1,2: தேங்கியிருந்த பொருட்கள் விற்பனையாகும். எதிர்பார்த்த வருவாயால் சங்கடம் விலகும்.

துலாம்

சித்திரை 3,4: குழப்பங்களில் இருந்து விடுபடுவீர். சிலருக்கு எதிர்பார்த்த தகவல் வரும். சுவாதி: மறைமுகமாக தொல்லை கொடுத்தவர்விலகிச் செல்வர். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். விசாகம் 1,2,3: உங்கள் முயற்சிகளை நிறைவேற்ற திட்டமிட்டு செயல்படுவீர். லாபம் ஏற்படும்.

விருச்சிகம்

விசாகம் 4: நேற்று இருந்த சங்கடம் குழப்பமும் விலகும். உங்கள் எதிரி விலகிச்செல்வர். அனுஷம்: மனதில் ஏற்பட்ட குழப்பம் விலகும். ஒரு சிலர் குலதெய்வ வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். கேட்டை: உங்கள் முயற்சி இன்று இழுபறியாகும். எதிரிகளால் சங்கடம் தோன்றும்.

தனுசு

மூலம்: இரவு வரை உங்கள் செயல்களில் லாபம் காண்பீர். முயற்சியில் இருந்த தடை நீங்கும். பூராடம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி எளிதாக நிறைவேறும். உங்கள் எண்ணம் பலிக்கும். உத்திராடம் 1: நேற்று நிறைவேறாமல் இருந்த முயற்சி நிறைவேறும். பிரச்னைகள் முடியும். 

மகரம்

உத்திராடம் 2,3,4: மறைமுகமாக தொல்லை கொடுத்தவர் விலகுவர். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். திருவோணம்: மனம்மகிழும்படியான சம்பவம் நடந்தேறும். நீங்கள் எதிர்பார்த்ததை இன்று அடைவீர். அவிட்டம் 1,2: கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். எதிரிகள் விலகிச்செல்வர்.

கும்பம்

அவிட்டம் 3,4: பூர்வீக சொத்து வகையில் புதிதாக பிரச்னை தோன்றும். எதையும் சமாளிக்கும் சக்தி உண்டாகும். சதயம்: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர். பூரட்டாதி 1,2,3: இழுபறியாக இருந்த முயற்சி இன்று பூர்த்தியாகும். நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும்.

மீனம்

பூரட்டாதி 4: வியாபாரத்தில் இருந்த தடை நீங்கும். வெளியூர் பயணத்தில் ஆதாயம் உண்டாகும். உத்திரட்டாதி: குடும்பத்தில் உண்டான நெருக்கடி விலகும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். ரேவதி: அணுகுமுறையால் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும்.