வடக்கு புகையிரத பாதையை நவீனமயமாக்கும் திட்டம் : புகையிரத சேவையை 06 மாதத்திற்கு நிறுத்த நடவடிக்கை!

#SriLanka #Lanka4 #Train #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
வடக்கு புகையிரத பாதையை நவீனமயமாக்கும் திட்டம் : புகையிரத சேவையை 06 மாதத்திற்கு நிறுத்த நடவடிக்கை!

வடக்கு புகையிரதத்தை நவீனமயமாக்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜனவரி 07 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இந்த திட்டத்தின் கீழ்,  மஹவ தொடக்கம் அனுராதபுரம் வரையான வடக்கு புகையிரதப் பகுதியை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதன் நிமித்தம் குறித்த பகுதியூடான போக்குவரத்து 06 மாதக் காலத்திற்கு மூடப்படும் என இண்டிபோலகே குறிப்பிட்டார்.  

இந்த காலப்பகுதியில் கொழும்பில் இருந்து மஹவ மற்றும் அனுராதபுரத்திலிருந்து காங்கசன்துறை வரை மட்டுமே ரயில் சேவைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4