முல்லைத்தீவில் பெருந்திரளானோர் கலந்துகொண்டு அஞ்சலி!

#SriLanka #Mullaitivu #Lanka4 #tsunami #tribute #lanka4Media #lanka4_news #லங்கா4 ஊடகம் #lanka4.com
Mayoorikka
2 years ago
முல்லைத்தீவில் பெருந்திரளானோர் கலந்துகொண்டு அஞ்சலி!

ஆழிப்பேரலையின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் புதுக்குடியிருப்பில் இடம்பெற்றது.

 கடந்த 2004.12.26 அன்று இடம்பெற்ற ஆழிப்பேரலை அனர்த்தம் காரணமாக உயிரிழந்த உறவுகளின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று பல்வேறு இடங்களில் அனுஸ்ரிக்கப்படுகிறது.

images/content-image/2023/12/1703582654.jpg

 அந்தவகையில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப் பேரலை அனர்த்தம் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உயிரிழந்த உறவுகளில் ஒரு தொகுதியினரின் உடலங்கள் புதைக்கப்பட்ட புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதி ஓரத்திலே புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் அமைந்திருக்கின்ற சுனாமி நினைவாலய வளாகத்தில் இன்று(26) காலை 8 மணிக்கு நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது.

images/content-image/2023/12/1703582670.jpg

 சுனாமியில் தங்களது உறவுகளை இழந்த உறவுகளால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து உறவுகளுக்காக சுடரேற்றி மலர்தூவி அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

images/content-image/2023/12/1703582688.jpg

 நிகழ்வில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள், சமூக செயற்பாட்டாளர்கள், நலன்விரும்பிகள் என பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்

images/content-image/2023/12/1703582709.jpg

images/content-image/2023/12/1703582743.jpg

images/content-image/2023/12/1703582768.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4